வெள்ளி, 29 மே, 2009

ஃபினிக்ஸ் பறவையும் நானும்














அயல்நாட்டில் வேலையென
அலையாமல் நம் நாட்டிலேயே
நாட்களைக் கடத்தியவர்களில் 
நானும் ஒருவன்

எப்படியோ எட்டாத கனியை 
எட்டிப்பறித்து இநயம் எட்ட
அரபு நாடு நோக்கி நெஞ்சம் சிறகடித்த
சில நாட்களுக்குள்ளேயே 
சத்தமில்லாத ஆரவாரத்துடன்
சௌதி புறப்பட்டேன்.

பாலைவன மணற்பரப்புகளின் நடுவே
பரந்து விரிந்த சாலைகளுடன்
அங்குமிங்கும் எங்காவது
கிராமமோ நகரமோ
கண்களுக்கு தென்பட்டாலும்
மனிதர்கள் என்னவோ
மிகக் குறைவுதான்
மலிந்து கிடக்கும்
வாகனங்களைக் கணக்கிடும்போது

மணற்பரப்பில் எப்படி
மனிதர்கள் குறைவோ!
அதைவிட 
மனிதர்களில் (?) மனிதநேயம்
குறைவோ குறைவு
இருக்கிறதோ?   இல்லையோ???

மேலும் சொல்வேன்.


ஞாயிறு, 24 மே, 2009

“செய்வதைச் சரியாகச் செய்வதே யோகம்”

செய்யும் செயலில் கவனம்
ஒரு ஜென் மத குருவிடம் சீடன் ஒருவன் “தங்களுடைய கொள்கை என்ன என்று கேட்டார்?”. குருவின் பதில்… “பசி எடுத்ததால் சாப்பிடுவது, தூக்கம் வந்தால் தூங்குவது”. சீடர் மறுபடியும் இவ்வாறு கேட்டார். “பசித்தால் புசிப்பது, உறக்கம் வந்தால் உறங்குவது” இதைத்தான் எல்லோரும் செய்கிறார்களே என்றார். ஞானி சிரித்தார். மற்றவர்களுக்கும் எனக்கும் வேறுபாடு உள்ளது. நீங்கள் சாப்பிடும் போது உங்கள் மனம் சாப்பாட்டில் இருக்காது. அங்கும் இங்குமாக அலைபாயும். எதையோ நினைத்துக் கொண்டு, பேசிக் கொண்டு சாப்பிடுவீர்கள். நான் சாப்பிடும் போது சாப்பிட மட்டும் செய்கிறேன், வேறு எந்த சிந்தனையும் கிடையாது. நீங்கள் தூங்கும் போது உங்களது மனம் தூக்கத்தில் இல்லை, கவலையில், சிந்தனைகளில் மற்றும் குழப்பத்தில் அலைகிறீர்கள். ஆனால் தூக்கத்தின் போது நான் தூங்க மட்டுமே செய்கிறேன். “செய்வதைச் சரியாகச் செய்வதே யோகம்” என்று கீதை கூறுகிறது.

செய்யும் தொழிலில் ஒன்றிவிடும் போது, அது தியானமாகி விடுவதோடு செய்யப்படுவதும் முழுமையாக அமைந்து விடுகிறது. அத்துடன் செய்யும் தொழிலின் பாரம், துன்பம் எதுவும் இல்லாமல் போய்விடுகிறது.

வியாழன், 21 மே, 2009

தமிழனுக்கென்று அரசாங்கம் தமிழனுக்கொரு தலைவன் தமிழனுக்கொரு தலைவன்

பொய்யாகிப் போகாதோ?
உன் மரணம்
பொய்யாகிப் போகாதோ?
நீ
பக்கத்திலிருந்த தைரியத்தால்
வீரம் பேசித் திரிந்தோமே...
வீணாய்ப் போனதே
அத்தனையும்!

வீணாய்ப் போனதேன்
அத்தனையும்?
இறுதிவரை நீ
ஈழ மண்ணை விட்டு
ஓடவில்லை!
உன் உறுதி
கர்வப்பட வைக்கிறது...
நீ ஓடி
உயிர்தப்பியிருக்கக்கூடாதா?
என்
உள்மனம் ஏங்குகிறது!
மெய் சிலிர்த்துக் கிடந்தோமே!
தமிழனுக்கென்று அரசாங்கம்
தமிழனுக்கொரு ராணுவம்
தமிழனுக்கொரு தலைவன்
பொய்யாகிப் போனதே
அத்தனையும்!
இனப்படுகொலையின்
வலியை உணர்ந்தாய் நீ...
வலியை உணர்ந்தவர்கள்
உன் பின்னால் சேர
வலிமையானாய் நீ!
தமிழனைக் காக்கத்தானே
நீ
துப்பாக்கி தூக்கினாய்?
உன் பின்னால்
பீரங்கியே அணிவகுத்ததே
பின்னாளில்!
இன்று
எட்டி நின்று
வேடிக்கை பார்க்கும் தமிழகம்
அன்று உன்னை
தட்டிக் கொடுத்ததே!
உலகத்தின் சுழற்சியால்
சூழ்ச்சியால்
இனப்போராளி உன்னை
தீவிரவாதியென்றல்லவா
தடை செய்தது!
அடிமேல் அடி விழுந்தாலும்
"ஓயாத அலை"யாக
சுழன்றடித்த நீ
இன்று அமைதியானாயே!
பதுங்கு குழிகள்
பாதுகாப்பு வளையமென
தமிழரைக் கொன்றொழித்து
உன்னைப் பழியாக்கி
பலியாக்கிய
உலகத்தின் சூழ்ச்சியை
எப்படிச் சொல்வேன்?
வெட்கக்கேடு!
எழுதப்படும் வரலாறுகள்

உன்னை
எப்படி வேண்டுமானாலும்
சொல்லட்டும்...
உன் உறுதியை
உன் வலிமையை
உன் பெருமையை
என் பேரனுக்கும்
சொல்லிக்கொடுத்து உரமேற்றுவேன்...
அதுபோதும் எனக்கு!
கோழை தினம் தினம் இறக்கிறான்
வீரனோ..ஒருநாள்தான் வீர மரணத்தை தழுவுகிறான்
அவன் விதைக்கப்படுகிறான்
அவனுள்ளிருந்து ஆயிரம் ஆயிரம்
வீரர்கள் பிறக்கின்றனர்...
துரோகிகளை அழிக்க
பிரபாகரா..உன் கனவு நனவாகும்
உண்மையான தமிழின ஆர்வலர்களால்..
நீ இறந்துவிட்டாயாம்..
பித்ற்றுகின்றனர்
பாவிகள்..
பேதைகள்..
எந்நிலையிலும் உனக்கு மரணமில்லை
முன்னொரு காலத்தில்
மனிதன் என்றொரு
உயிரினம் இருந்ததாம்
இப்போது அவன்
எங்கே என்று
தெரிய வில்லை..
நாங்கள். யாரிடம்
போய் புலம்ப ..
அரண்மனைகளின் பீரங்கி
பாதுகாப்பானதென்றும்
குடிமக்கள் ஏந்தும் துப்பாக்கி
பயங்கரமானதென்றும்
சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது எனக்கு.
எவர் ஆதரவுமற்று
எந்த உதவியுமின்றி

சொந்த மண்ணில்
போராடுபவன்
தீவிரவாதி.
அண்டை அயலார்
துணைகொண்டு
அதிகார வெறியின்
மேல் நின்று
இனஅழிப்புச் செய்பவன்
தேசம் காப்போன்.
உலகத்தின் அகராதியில்
புதுப்புது அர்த்தங்களால்
மலிகின்றன பிழைகள்.
மடிகின்றன உயிர்கள்
மிச்சமிருக்கும் நம் கொஞ்ச நஞ்ச மனித நேய
உணர்வுகளாவது இனி சாகாமல் இருக்கட்டும்






-வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன்
மற்றும் முகம்தெரியாத இன்னும் பலர்..