பதிவு செய்த நாள் 15 March 2010
சென்னை: உங்கள் குழந்தை எந்த விளையாட்டில் எதிர்காலத்தில் ஜொலிக்க முடியும் என்று அறியாமல் எதையாவது விளையாட வற்புறுத்துகிறீர்களா? இனி, அது வேண்டாம். புதிய சோதனை மூலம் குழந்தைக்கு ஏற்ற விளையாட்டை கண்டுபிடித்து விடலாம். நாட்டிலேயே முதலாவது முறையாக அறிமுகமாகியுள்ள இந்த சோதனைக்கு ‘ஸ்போர்ட்ஸ் ஜீன் டெஸ்ட்’ என்று பெயர். இதற்கான சோதனையை சூப்பர் ரெலிகேர் லெபாரடரிஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ரத்த பரிசோதனை தேவைப்படாத எளிய டெஸ்ட் இது. ஏசிடிஎன்3 ஜீன் உடலில் இருக்கும் குழந்தைகள் எதிர்காலத்தில் தடகள விளையாட்டுகளில் சாதனை படைக்க முடியும் என்று 2003ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி காமன்வெல்த் விளையாட்டு 2010ன் தலைமை மருத்துவ அதிகாரியும், விளையாட்டு மருத்துவ நிபுணருமான பரத்தீந்தர் சிங் கூறியதாவது: குழந்தைகளிடம் ஸ்போர்ட்ஸ் ஜீன் டெஸ்ட் செய்வது நல்லது. வேகமான விளையாட்டு, மிதமான விளையாட்டு இரண்டில் ஒரு குழந்தைக்கு எது பொருந்தும் என்பதை பெற்றோரும், பயிற்சியாளரும் அறிய அது உதவும். குழந்தையால் எதிர்காலத்தில் எந்த விளையாட்டில் ஜொலிக்க முடியும் என்பதை முன்கூட்டி அறியாமல் ஆண்டுகளை வீணாக்குவது தவிர்க்கப்படும். ஏசிடிஎன்3 ஜீன் இருக்கிறதா என்று அறியும் சோதனையால், எந்த வகையான விளையாட்டு அந்தக் குழந்தைக்கு பொருத்தமானது என்பதை அறிய முடியும் என்றார்.
நன்றி - தினகரன்